சுலைமானி கொலைக்கு ஈரான் பதிலடி: அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல்

தொடர்ந்து ஈராக்கில் அமெரிக்க ராணுவத் தளத்தைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது.


நாட்டின் பாக்தாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றது. மேலும், ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் உட்பட பலரும் இத்தாக்குதலில் பலியானார்கள்.

இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த ஈரான் சனிக்கிழமை அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறது. பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது இரண்டு மோர்டார் ஏவுகணைகளைச் செலுத்தியுள்ளது.

அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் நடந்த இந்த வான்வழித் தாக்குதலில் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை.